tamilnadu

கால்நடைவிலங்குகளுக்கு இனப்பெருக்க பரிசோதனை முகாம்

நாமக்கல், ஜன. 21- நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை விலங்குகளான பசுக்கள், வெள்ளா டுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இனப்பெருக்க பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்கும் முகாம் நடைபெற உள்ளது  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசால் கடந்த 2011ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் 18 கிராமங்களில் 900 பயனாளிகளுக்கு 900 கறவை பசுக்களும் மற்றும் 451 கிராமங்களில் 26,911 பயனாளிக ளுக்கு 1,07,644 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் வழங்கப் பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத் தித் திறனை பெருக்கவும்,  வெள்ளாடு கள் மற்றும் செம்மறி ஆடுகளின் எடை யினை அதிகரிக்கவும், ஜன. 24  முதல் ஜன. 25ஆம் தேதி வரை கறவைப் பசுக்களுக்கு, இனபெருக்க மருத்துவ பரிசோதனையும், வெள் ளாடு – செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு  நீக்க முகாம்களும் நடைபெற உள் ளது. மேலும், விலையில்லா கால்நடை கள் வழங்கிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டும் அல் லாமல் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

;